மறதி
வயதாகி விட்டது - அதனை சார்ந்த
மறதி வந்துவிட்டது
இரு நாட்களுக்கு முன் புதிதாய்
சந்தித்தவரின் முகம் தெளிவாய்
நினைவில் இருக்க
பெயர் மறந்து விட்டது
இன்று குளிக்கும் போது உதித்த
கவிதை வரிகள் எவ்வளவு முயன்றாலும்
ஞாபாகத்தில் இல்லை
என்றாலும் இந்த மறதியும்
வசதியாகத்தான் இருக்கிறது !
ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை
முழுமையாக பார்த்த பிறகு
முன்பே பார்த்துவிட்டோமோ
என்ற எண்ணம் வந்தது
எவ்வளவு யோசித்தும் சென்ற வாரம்
மனைவியிடம் எதற்கு சண்டையிட்டோம்
என்ற நினைவே இல்லை
