Wednesday, April 01, 2026

மௌனங்களின் அர்த்தங்கள்


மௌனங்களின் அர்த்தங்கள் 

என் மௌனங்கள் 

உன்னை உதாசீனப்படுத்துவதைக்காக  அல்ல 

என் வார்த்தைகள் 

உன்னை காயப்படுத்தி விட கூடாதே என்பதற்காக 

நான் எழுப்பிய அரண்.

என் மௌனத்திற்கு பின்னால் 

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களின் 

வார்த்தை பிழம்புகளின் ஒரு துளி கூட 

உன்மேல் விழுந்துவிட கூடாதென்பதற்காக 

நான் அணிந்து கொள்ளும் கவசம் இந்த மௌனம்.

சொல்லப்பட்ட வார்த்தைகள் வலுவிழந்து விடுகின்றன 

வார்த்தைகளுக்கு ஒரு பொருள் 

மௌனத்திற்கோ பல பொருள் !!




வாழ்க்கை ஒரு வட்டம்


எத்தனை துன்பம் வந்தாலும் உன்னுடன் இருந்தால் 

எதையும் தாங்கமுடியும் என்ற நிலைமாறி 

இத்தனை துன்பம் தாங்கி சேர்ந்து  வாழ வேண்டுமா 

என்ற எண்ணம் தோன்றலாயிற்று 

கூடல்களுக்கு நடுவே சிறு சிறு ஊடல்கள் என்ற காலம் மாறி 

ஊடல்களுக்கு நடுவே கூடல்களை தேடும் நிலை

நாட்கள் கரைய ஊடலின் வீரியம் குறைய 

அன்பும் அரவணைப்பும் மனம் தேட 

எதற்கு சண்டையிட்டோம் என்றே மறந்துபோக 

கோபம் மறைய காதல் தெரிய 

மனம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது 

அடுத்த சண்டைக்கு காத்திருக்க தொடங்கியது 

 வாழ்க்கை ஒரு வட்டம் !