Sunday, December 08, 2013

சின்னதாய் சில ஆசைகள்

சின்னதாய் சில ஆசைகள் 

வெறிக்க ஒரு விட்டம் 
கலர் கலராய் சில கனவுகள் 
இருட்டாய் வெளிச்சமாய் நட்சத்திரங்களுடன் நிலாவுடன்  
தூரத்தில் தெரியும் வானம் 
இரைச்சல் இல்லாத இசை 
நெரிசல் இல்லாத சாலை 
சுட்டெரிக்காத சூரியன்  
உறைய வைக்காத குளிர்
அளவான ஆசை 
அளவில்லாத அன்பு 
உயரிய சிந்தனைகள்
உண்மை நாடும் நெஞ்சம் 
ஆணவம் இல்லாத நோக்கு
அகந்தை இலாத நாக்கு 
எதிர்பார்ப்பில்லாத உறவுகள்

யாரையும் சார்ந்து இல்லாத முதுமை
வலி இல்லாத மரணம் 

0 Comments:

Post a Comment

<< Home