கனவு தொழிற்சாலை
கனவு தொழிற்சாலை
என் கனவுத் தொழிற்சாலையில்
கவிதைகள் நெய்யப்படும்
வாரத்தில் ஏழு நாட்களும் ஞாயிறு
வசந்த காலம் மட்டும் சாத்தியம்
கவலைகளையும் காலணிகளையும் வாசலில் களைந்துவிட்டு
கனவுகளையும் கவிதைகளையும் மட்டும் கொண்டு
காலடி எடுத்து வெய்யுங்கள்
நோய்களும் வலிகளும் இங்கில்லை
மரணங்கள் இங்கே மறுக்கப்படும்
காதலர்களுக்கு அனுமதி இலவசம்
கவிஞர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்
கனவுகளையும் கவிதைகளையும் மட்டும் கொண்டு
காலடி எடுத்து வெய்யுங்கள்
நோய்களும் வலிகளும் இங்கில்லை
மரணங்கள் இங்கே மறுக்கப்படும்
காதலர்களுக்கு அனுமதி இலவசம்
கவிஞர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்
அழகான பெண்களுக்கு
அனுமதி இங்கே
காலம் காட்டும் கருவிகளுக்கு தடை
0 Comments:
Post a Comment
<< Home