Wednesday, December 19, 2007

தன்னம்பிக்கை

விழும் போதுகூட எழுவதை பற்றி யோசி
விழுந்ததின் வலி தெரியாது
எழுந்ததும் விழுந்தோமே என்று வருந்தாதே
ஏன் விழுந்தோம் என்று ஆராய்ந்து பார்
மீண்டும் விழுவதை தவிர்க்கலாம்
குப்பை காகிதம் காற்றாடி ஆன அதிர்ஷடத்தை
எண்ணி வியந்து நேரத்தை வீணாக்காதே!
உழைப்பின் உன்னதத்தை மறக்காதே
தன்னம்பிக்கையை மட்டும் தானமாக தந்திடாதே!
வெற்றியின் போதையில் நன்றி மறக்காதே!
தோல்விக்கு பிறகு கிட்டும் வெற்றிக்கு தான் சுவை அதிகம்

வெட்கத்தில் நிலா

வெட்கத்தில் நிலா
நிலாப் பெண்ணே!
எத்தனை நேரந்தான் மேகத்திரைக்குப் பின்
முகம் மறைத்திறுப்பாய்?
உன் அழகை மறைக்க மனமில்லாது
மேகங்கூட வேகமாய் நகருதே புரியலையா உனக்கு?

உயிர்மொழி

உயிர்மொழி

மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி
அதுவே என் உயிர் மொழி
என்னை சிந்திக்க வைத்த முதல்மொழி - என்
சிந்தனைகளுக்கு வடிவம் தந்த வலிய மொழி - என்
சோகங்களுக்கு வடிகால் தந்த வன்மொழி
சுகங்களுக்கு வண்ணம் பூசிய சுகமொழி
என்னை எனக்கே அடையாளம் காட்டிய பழம்மொழி
உரையாடுவதற்காக முன் வந்த மொழி அல்ல
உயிரோடு உறவாடுவதற்காக கண்ட மொழி
மொழிகளிலே தலையான என் தாய்மொழி
ஐயாயிரம் ஆண்டு கன்னி மொழி
பல்லாயிரம் கோடி உயிர்களை
ஊடுருவிய உன்னதமொழி