Tuesday, December 26, 2006

விரக்தியில் ஒரு மனம்

இயற்கையை ரசித்து நாளாகிவிட்டது
இயந்திர வாழ்க்கை என்றாகிவிட்டது
மனம் கவிதை எழுத மறந்துவிட்டது
இற்றுப் போன மரமாகிவிட்டது
உறவுகள் எல்லாம் தூரமாகிவிட்டது
உறக்கமும் என்னை கைவிட்டது
வலியே வாழ்க்கையாகிவிட்டது
வாழ்கையே வலியாகிவிட்டது
தோற்று தோற்று பழக்கமாகிவிட்டது
தோல்வியே தோழன் என்றாகிவிட்டது
மதியை நம்பி நேற்று வீணாகிவிட்டது
விதியை நம்பி நாளை விடியப்போகிறது